முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
இதனையடுத்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் வகித்த சகல பதவிகளையும் மஹிந்த ராஜபக்ஷ துறந்துவிட்டார்.
இது தொடர்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு, விரைவில் கூடி ஆராய்ந்து முடிவெடுக்கும்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை, மஹிந்த ராஜபக்ஷ இழந்தால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் கேள்விகுறியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.