ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்முதலாவது மாநாடு, கததாஸ உள்ளக அரங்கில் இன்று (11) இடம்பெற்றது. அந்த மாநாட்டில் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டு உரையாற்றிய, முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ, தமிழ் மொழியிலும் உரையாற்றினார்.
“நான், சொல்வதைதான் செய்வேன். சொல்லியதைதான் செய்தேன். தமிழ் மக்களின் பிரச்சினையை நான் அறிவேன்” என தமிழிலேயே உரையாற்றினார்.
இதனிடையே, சிங்கள மொழியில் தனதுரையை தொடர்ந்த மஹிந்த ராஜபக்ஷ, யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் வருவதற்கு பலரும் அஞ்சிய காலமிருந்தது. அந்தக் காலத்தில் யாருமே வருவதில்லை. இன்று மாணவர்கள் உள்ளிட்ட பலரும், கொழும்புக்கு வந்துசெல்கின்றனர். அதுவும் ரயிலில் வந்துசெல்கின்றனர்.
அந்த ரயில் சேவை இல்லாமல் இருந்த காலத்திலும் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே, கொழும்புக்கு வந்துசென்றார். இன்றும் வருகின்றார் என்றார் மஹிந்த