பாலில் வறுத்தெடுத்தாலும், எந்த எண்ணெய்யில் வறுத்தெடுத்தாலும் காட்டுப்புறா ஒருபோதும் கழுக்கு ஆகாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இடம்பெற்ற, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த வைபவம் நேற்று (11) இடம்பெற்றது.
இந்த வைபவத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாங்கள் அபிவிருத்தியை முன்னெடுத்தோம், யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், கடந்த ஐந்து ஆண்டுகளில் எவ்விதமான நல்லிணக்கமும் ஏற்படுத்தவில்லை. பாரிய சவால்களுக்கு நாங்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, நாட்டில் பல்வேறானா அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்துள்ளோம்.
இந்நிலையில், ஆடையையும், முகத்தை மாற்றிக்கொண்டு தற்போது வந்திருக்கின்றனர். அது, வெள்ளைவேன், கடத்தல், காணாமாக்குதல் கலாச்சாரத்தை நாட்டில் மீண்டும் ஏற்படுத்தும் என்றார்.