ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவால், மக்களின் எதிர்ப்பார்ப்பினை நிறைவேற்ற முடியாது என, மக்கள் விடுதலை முன்னிணி தெரிவித்துள்ளது.
அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ, இதனைக் கூறியுள்ளார்.
“ஊழல் மோசடி தொடர்பில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள மற்றும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய, கோட்டாபய ராஜபக்ஷவால் நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்பினை நிறைவேற்ற முடியாது” என்றும் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிறுத்தியுள்ள ஜனாதிபதி வேட்பாளரால் நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், குடும்ப ஆட்சிக்கு நாட்டை மீண்டும் தள்ள வேண்டுமா என்பது தொடர்பில் நாட்டு மக்களே தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.