web log free
February 04, 2026

கொழும்பு கொம்பனிவீதியில் ஒருவர் கொலை

கொழும்பு, கொம்பனித்தெரு, முத்தைய்யா வீதியில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

47 வயதுடைய ஒருவரே இன்று அதிகாலையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு தரப்பினருக்கு இடையிலான முரண்பாடுகளை அடுத்து, இன்று அதிகாலை குறித்த நபர் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

படுகாயமடைந்த நிலையில் கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொம்பனித்தெரு பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd