web log free
September 20, 2024

மேலதிக வகுப்புக்களை தடை செய்ய ஆதரவு

ஞாயிறு பாடசாலைகளுகளுக்கு இடமளித்து பௌர்ணமி மற்றும் ஞாயிறு தினங்களில் காலை வேளையில் மேலதிக வகுப்புக்களை தடை செய்யும் யோசனைக்கு தான் ஆதரவளிப்பதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொட்டுக்கொட பகுதி தேவாலயம் ஒன்றின் 125ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இடம்பெற்ற பிரார்த்தனையில் கலந்து கொண்டபோது, அவர் இதனைக் கூறியுள்ளார்.ஃ

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “நாடாளுமன்றில் சட்டமூலம் ஒன்று கொண்டுவரப்பட்டிருந்தது, குறித்த சட்டமூலத்தில் ஞாயிறு மற்றும் பௌர்ணமி தினங்களில் ஞாயிறு பாடசாலை நடாத்துவதற்காக மேலதிக வகுப்புக்களை தடை செய்யும் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

தமது பிள்ளைகளின் சமய கல்வியின் பாதுகாப்பு கருதி தானும் அந்த வழக்கில் முன்னிலையானேன். இந்த யோசனைக்கு எதிராக சில தனியார் வகுப்பு ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

அதன் காரணமாக அந்த வழக்கில் நான் முன்னிலையானேன். இந்த கொள்கையை பாதுகாக்க வேண்டும். துரதிஷ்டவசமாக தற்போது மதங்களையும் அரசியலுடன் இணைத்து பயன்படுத்த முயற்சிக்கின்றனர்.

மதத்தையும் அரசியலையும் சமமாக கருத முடியாது. அரசியலில் ஒருவித சுயநலம் காணப்படுகிறது. தங்களை பிரசித்திப்படுத்தி காட்டிக் கொள்வதற்கு. இதன் காரணமாக அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்காக அந்த நபருக்குள் இருக்கும் ஆசையை தவறான வழியில் சிலர் பயன்படுத்துகின்றனர்.

அதிகாரம் என்பது சேவை, அரசியல் உலகில் உள்ள தலைவர்கள் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய விடயமாகும். சேவை செய்வதற்காகவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம்” என, அவர் குறிப்பிட்டுள்ளார்.