web log free
February 04, 2026

இன்று கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு

தேர்தல்கள் ஆணைக்குழு இன்றைய தினம் கூடவுள்ளதுடன், அண்மையில் உயிரிழந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திசாநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு மற்றுமொருவரை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.

வெற்றிடம் ஏற்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தெரிவுசெய்யப்படுவதற்காக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் சாந்த பண்டார, அண்மையில் இராஜினாமா செய்திருந்தார்.

இதேவேளை, 2019 ஆம் ஆண்டுக்கான வாக்களர் பட்டியலை மறுசீரமைப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd