web log free
February 04, 2026

மஹிந்தவுக்கு எதிராகவும் ஒழுக்காற்று

கடந்த 11 ஆம் திகதி, சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாநாட்டுக்கு சென்றிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி தெரிவித்தார்.

அந்த மாநாட்டில் சுதந்திரக் கட்சியின் காப்பாளரான முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ, சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பீ.திஸாநாயக்க, டிலான் பெரேரா உள்ளிட்டோர் பங்குபற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd