தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் நேற்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
அமெரிக்க – இலங்கை இருதரப்பு உறவுகள் தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக, வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், இந்தச் சந்திப்பின் போது, சோபா உடன்பாடு மற்றும் ஏனைய இருதரப்பு உடன்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதா என்று கூற வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
அதேவேளை, நேற்று இலங்கையின் அமெரிக்காவின் முதலீடுகளை அதிகரிப்பது, வேலைவாய்ப்பை அதிகரிப்பது குறித்து, அலிஸ் வெல்ஸ் வணிக சமூகப் பிரதிநிதிகளுடனும் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.