உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு, இம்மாதம் 23ஆம் திகதி இறுதி அறிக்கையை பெற்றுக்கொடுப்பதாக முன்னதாக அறிவித்திருந்தது.
எனினும், இறுதி அறிக்கையை தயாரிப்பதற்கு கால அவகாசம் தேவையென்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தெரிவுக்குழுவின் கால எல்லையை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இது தொடர்பான யோசனையை சபாநாயரிடம் முன்வைக்க எதிர்பார்ப்பதாக குழுவின்தலைவரும், பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தெரிவுக்குழுவின் சாட்சி விசாரணைகள் இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.