web log free
May 09, 2025

தாவணி இறுகி சிறுவன் உயிரிழப்பு

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் சல்வார் தாவணி கழுத்தில் இறுகியதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

இச்சம்பவத்தில் சசிதரன் கிருசான் (08) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

குறித்த சிறுவன், சல்வார் தாவணியை வைத்து விளையாடிக்கொண்டிருந்தபோதே,   அத்தாவணி கழுத்தில் இறுகியதாகவும் அதில் குறித்த சிறுவன்  உயிரிழந்துள்ளதாகவும்  தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

செட்டிகுளம், முகத்தான்குளம் பகுதியிலுள்ள தனது வீட்டில், குறித்த 08 வயதுச் சிறுவன், தனது05 வயதுச் சகோதரனுடன் சல்வார் தாவணியை யன்னல் ஊடாக கழுத்தில் கொழுவி விளையாடிக் கொண்டிருந்துள்ளான். இதன்போது, குறித்த தாவணி 08 வயதுச் சிறுவனின் கழுத்தில் இறுகியதில் அச்சிறுவன்  சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளான்.

குறித்த சிறுவனின் தந்தையார் கொலைச் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் 2015 ஆம் ஆண்டு முதல் மரணதண்டனை கைதியாக கண்டி போகம்பர சிறைச்சாலையில் உள்ள நிலையில், சிறுவன் தனது தந்தையாரை இவ்வாறு தான் கொலை செய்வார்களா என கழுத்தில் இறுக்கி பல தடவை வினவியதுடன், தந்தையார் தொடர்பில் மன அழுத்திற்கு உள்ளாகியிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd