2020 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் (பட்ஜெட்) இவ்வருடம் நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்குப் பதிலாக, அடுத்தாண்டு சில மாதங்களுக்கான அரச செலவீனங்களுக்காக, நிதியொதுக்கீட்டு சட்டமூலமொன்று, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது.
அதற்கான அங்கீகாரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று (13) நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது கிடைத்துள்ளது.
2019இல் ஜனாதிபதித் தேர்தலும் 2020இன் ஆரம்பத்தில் இன்னும் சில தேர்தல்களும் நடைபெறுமென எதிர்பார்க்கப்பட்டுள்ளமையால், நிதியொதுக்கீட்டு சட்டமூலமொன்றை, பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அந்த நிதியொதுக்கீட்டு சட்டமூலம், எதிர்வரும் நவம்பர் மாதம் நடுப்பகுதியில் சமர்ப்பிக்கப்படுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.