ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவு செய்யப்பட வேண்டுமென அந்தக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், புதிய வாக்காளர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தை சஜித் வடிவமைக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாசவிற்கு மக்கள் மத்தியில் ஆதரவு காண்பபடுவதாகவும், ஆகவே சரியான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர், கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் குறிப்பிட்டுள்ளார்.
“உண்மையில் சஜித் பிரேமதாஸவிற்கு சாதாரண தொண்டர்கள் வரை ஆதரவு காணப்படுகின்றன. ஆகவே அதனை நிராகரிக்க எம்மால் முடியாது அல்லாவா? சம்பிரதாயப் பூர்வமான அரசிலைத்தாண்டி, புதிய வாக்காளர்களை கவரக்கூடிய வேலைத்திட்டங்களை சஜித் பிரேமதாஸ வடிவமைக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் தொடர்பில் ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும். பின்னர் பொதுஜன பெரமுனவின் சவாலை எதிர்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.