web log free
March 17, 2026

சக்திபுரத்தில் தொடர் கைவரிசை

 

திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டக்கலை நகரப் பகுதிக்கு அருகாமையிலுள்ள சக்திபுரம் கிராமத்தில் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாகவும் 17 ஆம் திகதி வீடொன்று உடைக்கப்பட்டு, பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.


இதனால், சக்திபுரம் மக்கள் பெரும் அச்சத்துடன் இருக்வேண்டிய நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.


இதே கிராமத்தில், கடந்த 16 ஆம்திகதியன்று வீடொன்று உடைக்கப்பட்டு சுமார் 5 பவுண் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அதேகிராமத்தில் மற்றுமொரு வீடு கடந்த 11 ஆம் திகதியன்று உடைக்கப்பட்ட, மடிகணினி திருடப்பட்டுள்ளது.


இந்த கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் திம்புள்ள-பத்தனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன என்பதுடன், அது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd