ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவை கடுமையாக திட்டித் தீர்த்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நான் பொதுஜன பெரமுன வேட்பாளர். தேசிய சுதந்திர முன்னணி வேட்பாளர் அல்ல. உங்கள் கட்சி பிரச்சாரத்திற்கு எனது புகைப்படங்களை பயன்படுத்த வேண்டாம்” என கோத்தபாய கூறியுள்ளார்.
கோத்தபாயவை விமல் வீரவன்சசமாதானம் செய்ய முயற்சித்த போது, எனக்கு ஒன்றும் உங்களுடைய ஒத்துழைப்பு தேவையில்லை என, தொலைபேசி அழைப்பை துண்டித்துவிட்டார்.
கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதி வேட்பாளராக கடந்த 11ஆம் திகதி அறிவிக்கப்பட்டார்.
அதனையடுத்து கோத்தபாய ராஜபக்ஷவின் புகைப்படத்தை பயன்படுத்தி, விமல் வீரவன்சவின் கட்சி, நாடு முழுவதும் போஸ்டர் ஒட்டியிருந்தது.
அந்த போஸ்டர்களை தாங்கிய புகைப்படங்கள் பேஸ்புக்கில் பதியப்பட்டதுடன் கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
இதனால் ஆத்திரமடைந்த கோத்தாபய ராஜபக்ஷ,
சூழலுக்கு நெருக்கமான ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை நடத்ததுவதாக தான் மக்களுக்கு வாக்குறுதி வழங்கியுள்ள நிலையில், இது தேவையான என, விமலிடம் கேட்டுவிட்டார்.
உடனடியாக வீரவன்சவை தொடர்புகொண்ட கோத்தபாய “என்ன செய்து வைத்திருக்கிறீர்கள்? இது சரியா? நான் சுற்று சூழலுக்கு நெருக்கமான தேர்தல் பிரச்சாரம் நடத்துவதாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கி சில மணித்தியாலங்களுக்குள் அதனை மீறி விட்டீர்கள். இதற்கு என்ன பதில்? நான் தான் வேட்பாளர். அதனை தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்கள் பகிரங்கப்படுத்தியுள்ளேன். பட்டாசு போட்டார்கள். பாற்சோறு சமைத்தார்கள். நான் தான் வேட்பாளர் என அனைவருக்கும் தெரியும். உங்களுடைய போஸ்டர்கள் மீண்டும் எங்களுக்கு வேண்டாம். இதன் பாதிப்பு எனக்கு தான் என்பது உங்களுக்கு தெரியாது. மக்கள் என்னை பார்த்து சிரிப்பார்கள். இரண்டு வார்த்தை பேசும் நபர் என என்னை மக்கள் நினைப்பார்கள் என கடுமையாக தெரிவித்துள்ள விட்டு தொலைபேசி அழைப்பை துண்டித்து விட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.