web log free
July 01, 2025

தேர்தலில் இருந்து விலகுவதே ஜே.வி.பிக்கு நல்லது

நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான அணிகள் உள்ளன எனும் செய்தியை வெளிப்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடுவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இம்முறை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமது தரப்பானது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அணிக்கு ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியிருப்பதே மக்கள் விடுதலை முன்னணிக்கு சிறந்ததாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஜனநாயகத்தை பாதுகாக்க மக்கள் விடுதலை முன்னணி முன்வரவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd