web log free
March 23, 2026

முடிவின்றி கலைந்தது ஐ.தே.மு கூட்டம்

 

ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றிருந்த இன்றைய கூட்டத்தில் எவ்விதமான தீர்மானங்களும் எட்டப்படாமல் நிறைவடைந்துள்ளது. 

அந்தக் கூட்டம் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் இல்லத்தில்  இன்றுக்காலை இடம்பெற்றது. 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக  ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் கூடி ஆராய்ந்தனர். 

இதில், புதிய கூட்டணிக்கான யாப்பை திருத்துவது உட்பட்ட பல விடயங்களில் இணக்கம் காணப்பட்டன.

இதன்படி அடுத்துவரும் நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சி, பாராளுமன்ற – நிறைவேற்றுக் குழுக்களை கூட்டி ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் ஒரு முடிவை எடுக்குமென தெரிகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd