இலங்கையின் இராணுவ தளபதியாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் சர்வதேசம் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா
அமெரிக்கா, ஐ.நாவும் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ள அதேவேளை, சர்வதேச மனிப்பு சபையின் தெற்காசிய அலுவலகமும் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் இராணுவ தளபதியாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் மிகுந்த கவலையடைவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இராணுவ தளபதியின் நியமனம் தொடர்பில் அமெரிக்க தூதுவர் அலெய்னா பி ரெப்லிட்ஸ் தலைமையிலான கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், இன்று (19) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையினாலும் ஏனைய அமைப்புகளினாலும் ஆவணப்படுத்தப்பட்ட அவருக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள், பாரதூரமானதும் நம்பகரமானவையும் ஆகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச மனிப்பு சபை
இதேவேளை, இலங்கையின் இராணுவத் தளபதி ஆயுத மோதலின் போது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு முழுமையான பொறுப்புணர்வு இல்லாததை விளக்குகிறார் என சர்வதேச மனிப்பு சபையின் தெற்காசிய அலுவலகம் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
மிச்செல் பேச்லெட் கடும் அதிருப்தி
போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஐ.நா.வின் தொடர்ச்சியான அறிக்கைகளால் சிக்கியுள்ள இலங்கையின் மூத்த இராணுவ அதிகாரி ஷவேந்திர சில்வாவை புதிய இராணுவத் தளபதியாக நியமித்தமை தொடர்பில்,
ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் மிச்செல் பேச்லெட் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்