பல மாவட்டங்களில் விவசாயத்துக்கு பாரியளவில் சேதத்தை ஏற்படுத்திவரும் படைப்புழுவின் தாக்கத்தையடுத்து, விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில், விவசாயத் திணைக்களத்தின் வேலைத்திட்ட பிரிவைச் சேர்ந்த சகல அதிகாரிகளின் விடுமுறைகளும் மறு அறிவித்தல் வரையிலும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
படைப்புழுவை தாக்கியழிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளமையால், விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என விவசாயப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் டப்ளியு.எம்.டப்ளியு வீரகோன் தெரிவித்தார்.
45 ஆயிரம் ஹெக்டேயரில் பயிரிடப்பட்டிருந்த சோளத்தை படைப்புழு தாக்கியழித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.