“அவன் காட்” வழக்கை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு, “டிரயல் அட்பார்” நியமிக்குமாறு, சட்டமா அதிபர், பிரதம நீதியரசரிடம், நேற்று (21) கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
அவன்காட் தலைவர் நிஸங்க சேனாதிபதி, ரக்ன லங்காவின் மன்னாள் தலைவர் மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் உள்ளிட்ட 13 பேருக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு உட்படுத்துவதற்கே டிரயல் அட்பாரை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் 7,573 அதிக்குற்றச்சாட்டுகளின் கீழ், பிரதிவாதிகள் 13 பேருக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் நீதிமன்ற வரலாற்றில், இவ்வளவு அதிக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை இதுவே முதன்முறையாகும்.
இந்த சம்பவத்தினால், உள்ளூரில் மட்டுமன்றி சர்வதேச ரீதியில் கவனம் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.