web log free
May 02, 2024

முஸ்லிம் திருமணம், விவாகரத்தில் திருத்தம்

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் திருமணம், விவாகரத்தைப் பதிவு செய்தல் தொடர்பில், முஸ்லிம் திருமணம், விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

தபால் சேவை மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சர் எம்.எச். அப்துல் ஹலீம், நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள ஆகியோர் சமர்ப்பித்த  அமைச்சரவைப் பத்திரத்துக்கே அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, முஸ்லிம் பெண்கள் திருமணம் செய்யும் ஆகக் குறைந்த வயதெல்லை, பதிவு செய்யும் நடைமுறை, திருமணத்துக்கான விருப்பத்தை வெளிப்படுத்தல் ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

Last modified on Thursday, 22 August 2019 03:58