ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாஸ, பிரதமராக நியமிக்கப்படவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான குழுவைச் சேர்ந்தவர்களும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களும் இணைந்தே புதிய ஆட்சியை அமைக்கவுள்ளனர். அமைச்சர் சஜித் பிரேமதாஸ, பிரதமராக நியமிக்கப்பட்டால், அவருடைய அமைச்சரவையில், சஜித்தின் ஆதரவாளர்கள் நால்வருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன.
ஏனைய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகள், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இந்த நியமனங்களுக்கு எதிராக நீதிமன்றத்துக்கு சென்றாலும், பெரும்பான்மை ஆதரவைக் கொண்ட ஒருவருக்கே பிரதமர் பதவி வழங்கப்பட்டுள்ளமையால், அந்த நியமனத்தை சவாலுக்கு உட்படுத்த முடியாதென, ஜனாதிபதிக்கு சட்ட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டே, இந்த காய்நகர்த்தல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.