web log free
September 07, 2025

கோத்தாவின் கடவுச்சீட்டுக் குறித்து சி.ஐ.டி விசாரணை

 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் கடவுச்சீட்டு தொடர்பில், சி.ஐ.டியினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே, இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

கோத்தாபய ராஜபக்ஷ, வெளிநாட்டுப் பிரஜையாக இருக்கும் போது, உள்நாட்டுக் கடவுச்சீட்டை எவ்வாறு பெற்றுக்கொண்டார் என்பது தொடர்பிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு, பொலிஸ் தலைமையகத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே, இந்த விசாரணைகள் மீளவும் முன்னெடுக்கப்படுகிறன.

மேற்படி விவகாரம் தொடர்பில்  குற்றப்புலனாய்வு பிரிவினர், விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். அந்த விசாரணைகளிலிருந்து அப்பிரிவு விலகிக்கொண்டதை அடுத்தே,  கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அந்த விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd