web log free
April 06, 2026

‘கோத்தாவின் ஆட்சிக்கு செல்லமாட்டேன்’

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியானால், அவரது ஆட்சியின் கீழ் கடமையாற்றுவதற்கு நான் ஒருபோது எதிர்பார்த்ததில்லை என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்தார். 

கொழும்பில் இடம்பெற்ற வைபவத்துக்குப் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அப்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் உடனிருந்தார். 

கேள்வி- தற்போதைக்கு என்ன நடக்கிறது?

பதில்- எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் நல்ல நிலைமைக்குத் திரும்பும்

கேள்வி- கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தையா நீங்கள் சொல்கின்றீர்கள்

பதில் கோத்தாபய ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் கடமையாற்றுவதற்கு நான் தயாரில்லை.

கேள்வி- அப்படியென்றால் அது யார்?

பதில்- அது யாரென்று தற்போதைக்கு சொல்லமுடியாது. ஆனால், சாரமும், பெனியனும் அணிந்தவர், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்றார். 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd