விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் இலண்டனில் இன்று, ஆற்றிய உரையில் இதுவரை அதிகமும் அறியப்படாத ஒரு செய்தியைத் தெரிவித்தார்.
”2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் விடுதலைப் புலிகளின் சேரலாதன் என்னைத் தொலைபேசியில் அழைத்து ‘எல்லோரும் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? எதற்காகக் காங்கிரஸை எதிர்த்துப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் பேசப்பேச எங்கள் மேல் எக்ஸ்ட்ராவாகக் குண்டுகளைப் போடுகிறார்கள்..நீங்கள் ஓட்டுவாங்க நாங்கள் பலியாக வேண்டுமா’ எனக் கேட்டுத் திட்டிவிட்டு,
தொலைபேசியை புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் நடேசனிடம் கொடுத்தார்.
நடேசன், தலைவர் பிரபாகரன் என்னிடம் சொல்லச் சொன்னதாக ஒரு செய்தியைத் தெரிவித்தார். ‘நீங்கள் காங்கிரஸை எதிர்க்க வேண்டாம். உடனடியாகச் சென்று காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்தியுங்கள்’.
தலைவர் பிரபாகரனின் அந்தச் செய்தியைக் கேட்டதும்தான் நான் உடனடியாக அறிவாலயம் சென்று காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணியில் இணைந்துகொண்டேன்“ என்று அவர் தெரிவித்தார்.
இதனால் அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
கூட்டத்தைக் குழப்ப முயன்றவர்கள் வெளியேற்றப்பட்ட பின்னரே, அது தொடர்ந்து நடைபெற்றது.