ஜூலை மாதம் 5ஆம் திகதியிலிருந்து மதுபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிரான விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தன. கடந்த 50 நாட்களில் மது போதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் 10,214 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு பிரதேசத்திலேயே அதிகளவான சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை காலை 6 மணிதொடக்கம் நேற்று சனிக்கிழமை காலை 6மணி வரையான 24 மணித்தியாலங்களில் 160 பேர் வரையில் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களே இவ்வாறாக அதிகளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சாரதிகள் அனைவரும் நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன், சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.
நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்களுடைய சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படுவதுடன், அதிக பட்சமாக 12 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படும் .
இவ்வாறாக குற்றவாளிகளாக இனங்காணப்படும் சாரதிகளுக்கு குறைந்த பட்சம் அபராதமாக 25ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் .