web log free
February 04, 2026

50 நாட்களில் 10,214 சாரதிகள் கைது

ஜூலை  மாதம்  5ஆம்  திகதியிலிருந்து  மதுபோதையில்  வாகனம்  செலுத்துவோருக்கு  எதிரான   விசேட  நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டிருந்தன.   கடந்த  50   நாட்களில்   மது போதையில்  வாகனம்  செலுத்தியமை  தொடர்பில் 10,214 சாரதிகள்  கைது  செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு பிரதேசத்திலேயே  அதிகளவான  சாரதிகள்  கைது  செய்யப்பட்டுள்ளனர். 

வெள்ளிக்கிழமை  காலை  6  மணிதொடக்கம்  நேற்று  சனிக்கிழமை காலை 6மணி  வரையான  24  மணித்தியாலங்களில்   160 பேர் வரையில்  மதுபோதையில்  வாகனம்  செலுத்தியமை  தொடர்பில்  கைது  செய்யப்பட்டுள்ளனர். 


முச்சக்கரவண்டி  மற்றும் மோட்டார் சைக்கிள்  ஓட்டுனர்களே  இவ்வாறாக   அதிகளவில்  கைது  செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சாரதிகள்    அனைவரும்  நீதவான் நீதிமன்றங்களில்  ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன்,  சட்டநடவடிக்கைக்கு  உட்படுத்தப்பட்டனர். 

நீதிமன்றத்தால்  குற்றம்  நிரூபிக்கப்படும்  பட்சத்தில்  அவர்களுடைய  சாரதி  அனுமதிப்பத்திரம்  இரத்து  செய்யப்படுவதுடன்,  அதிக  பட்சமாக  12  மாதங்களுக்கு   இடைநிறுத்தப்படும்  . 

இவ்வாறாக  குற்றவாளிகளாக  இனங்காணப்படும் சாரதிகளுக்கு   குறைந்த  பட்சம்   அபராதமாக  25ஆயிரம்  ரூபாய்  அபராதம்   விதிக்கப்படும் . 

 

Last modified on Saturday, 07 September 2019 12:39
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd