web log free
August 31, 2025

திகதியை குறித்தார் துமிந்த


நீதிமன்றத்தை அவமதித்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள, கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, பெப்ரவரி 4 ஆம் திகதியன்று பொதுமன்னிப்பு கிடைக்கும் என, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று அவரை பார்வையிட்டு, திரும்பும் போது ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர்,


பௌத்தர்களுக்கு மட்டுமன்றி, இலங்கை வாழ் சகல மக்களுக்காகவும் ஞானசாரதேரர் பெரும் சேவையாற்றியுள்ளார். அவரின் விடுதலைக்காக மாநாயக்க தேரர் உள்ளிட்ட, ஏனைய மதங்களின் தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அதனடிப்படையில் இதுதொடர்பில் கோரிக்கையொன்றை ஜனாதிபதியிடம் முன்வைப்பதற்கு நாங்கள் அனைவரும் தயாராகவே இருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd