ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸவுக்கு காலக்கெடு விதித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
செப்டெம்பர் 3ஆம் திகதிக்கு முன்னர் தன்னுடைய நிலைப்பாட்டை அறிவிக்குமாறு மைத்திரி தரப்பு சஜித்திடம் கோரியுள்ளதாக அறியமுடிகின்றது.
இதுதொடர்பில், மைத்திரியின் வலது கையொருவர், சஜித்துக்கு கடிதமொன்றை இன்று கையளித்துள்ளார் என அறியமுடிகின்றது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொது வேட்பாளராக களமிறங்குவது தொடர்பில் உறுதியான முடிவை அறிவிக்குமாறும் அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
எனினும், ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து பச்சை சமிக்ஞை வரும் வரையிலும் சஜித் பிரேமதாஸ காத்துக்கொண்டிருக்கின்றார் என அறியமுடிகின்றது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு செப்டம்பர் 3ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
தேசிய மாநாட்டிலேயே தங்களுடைய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை, அறிவிக்கவுள்ளதாக சுதந்திரக் கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.