ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்றிரவு முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஸ்ரீ லங்கா சுந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்றுக்காலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்தே இவ்விருவரும் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பில், இரு கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்றுக்காலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
காலை இடம்பெற்ற சந்திப்புக்குப் பின்னர் கருத்துரைத்திருந்த பசில் ராஜபக்ஷ இரு கட்சிகளின் தலைவர்களும் இன்று இரவுகூட சந்திக்கலாம் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.