நாட்டிற்குள் குற்றச்செயல்கள் தொடர்பான சம்பவங்கள் பெரும் எண்ணிக்கையில் அதிகரிப்பதினால் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வது காலத்தின் தேவையாகும்.
இதனால் சில சட்டங்களிலும் கட்டளைச்சட்டங்களிலும் உள்ளடங்கியுள்ள ஒழுங்கு விதிகளை மீறுவது தொடர்பில் விதிக்கப்படும் தண்டப்பணம் அதனை மீறுவதை தடுப்பதற்கு எந்த வகையிலும் போதுமானதாக இல்லாமை தொடர்பாக மதிப்பீடு செய்து சிபாரிசை சமர்ப்பிப்பதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் சிபாரிசுக்கமைவாக குற்றவியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் தொடர்பிலான தண்டப்பணத்தை அதிகரிப்பதற்காக சட்ட திருத்தத்தை மேற்கொள்ளுமாறு சட்ட வரைவு பிரிவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரளை சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.