web log free
July 01, 2025

பளையில் கைதானோர் விபரம்

 இராணுவத்தினரால் ஆகஸ்ட் 18ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்ட பளை வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபன், யாழ்ப்பாணம் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அவரிடம், கொழும்பிலிருந்து சென்றிருக்கும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், 1.சின்னமணி தனேஷ்வரன், 2.இரத்தினம் கிருஷ்ணராசா, 3. மோகனசுந்தரம் சின்னத்துறை, 4. விநாயகமூர்த்தி நெஜிலன் ஆகிய நால்வரும் கைதுசெய்யப்பட்டனர். அந்த சந்தேகநபர்களிடம் முன்னெடுத்திருந்தது.

விசாரணைகளின் பின்னர், 5.டி.நிமல்ராஜ், 6.ரூபன் யதுஷன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர் எனத் தெரிவித்துள்ள பொலிஸ் தலைமையகம், அவர்களிடமிருந்து பெறறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், பெருந்தொகையான ஆயுதங்கள், வெடிப்பொருட்கள், தூரநோக்கி ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd