சாரியை அணிந்துகொண்டு, திருகோணமலை பஸ் நிலையத்துக்கு, வந்திருந்த பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவருடன் இருந்த 13 வயதான சிறுமி உட்பட இன்னுமொரு பெண்ணையையும் பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர். இன்று 1:30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தினால், பதற்றமான நிலைமையொன்று அங்கு ஏற்பட்டிருந்தது.
பஸ் நிலையத்துக்கு வந்திருந்த பெண்களில் ஒருவர், அணிந்திருந்த சாரியில், புத்த பெருமானின் உருவத்தை சிலர் கண்டுள்ளனர்.
அதனையடுத்து கொதித்தெழுந்தவர்கள் அப்பெண்ணை தூற்றியுள்ளனர். நிலைமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, அங்கு விரைந்துவந்த பொலிஸார், அந்த பெண்கள் மூவரையும் பொலிஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, சென்றுவிட்டனர்.


