web log free
May 09, 2025

அதிகாரத்தை பகிர்வதே எனது நோக்கம் - சஜித்

 
 
கொழும்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறினார்.
 
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், நாட்டு மக்களை சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என வேறு படுத்துவது நியாயமற்றது என குறிப்பிட்டார்.
 
எவ்வாறாயினும் ஒருமித்த இலங்கை என்ற கொள்கையில் எந்தவித விட்டுக் கொடுப்பும் செய்து கொள்ளப்படாது எனவும் அவர் கூறினார்.
 
ஒருமித்த இலங்கை என்பது எழுதப்பட்ட ஆவணமாக மாத்திரம் இருக்கக் கூடாது. 
 
அதிகபட்சமாக ஒருமித்த இலங்கைக்குள் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதே தனது நோக்கம் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
 
மாறாக அதனை ஒவ்வொரு இலங்கையர்களும் மனரீதியாக உணர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
 
 
இவற்றை முன்னெடுக்க வேண்டுமாயின் இனவாதத்தை நாட்டில் இருந்து முற்றாக ஒழிக்க வேண்டும் எனவும் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்துள்ளார். 
 
நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் இலங்கையர்கள் என்ற அடிப்படையிலேயே நோக்குவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
 
Last modified on Saturday, 31 August 2019 14:13
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd