ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் இன்னும் இழுபறியான நிலைமையே காணப்படுகின்றது.
இந்நிலையில், அந்தக் கட்சியின் சின்னமான யானையை தொடர்புபடுத்தி, கருத்துகள் வெளிவரத்தொடங்கியுள்ளன. “யானை ஒரு அடக்கமான விலங்கு அது குழம்பினால் பயங்கரமானது” என அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
அம்பகமுவ செல்லிப்பி கிராம வீதியை திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தனதுரையில், “இந்த வீதியை திறந்தால், மொட்டுக்கட்சியினால் தலையில் நிற்பதாகத் தெரிவித்தனர்.
அது புதுமையானது இல்ல. ஏனென்றால், தலையில் நின்றால், சாரம், தலையை மறைத்துவிடும். அது, அவர்களின் நிர்வாணத்தை காண்பிக்கும்.
ஆகையால் பரவாயில்லை” என்றார். தலையில் நிற்பதாக தெரிவிக்கும் மொட்டு அண்ணாக்களின் செயற்பாடுகள் தொடர்பில் நான் கூறமாட்டேன். அவர்களின் குப்பைகளை கிளறுவதற்கு நாங்கள் விருப்பவில்லை.
எங்களுக்கு தேவை பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதாகும்.
வீதி அபிவிருத்திச் செய்யப்படுவது ஐக்கிய தேசியக் கட்சிக்கும், கட்சியின் ஆதரவாளர்களுக்கும் உரித்தானது அல்ல.