ஜனாதிபதித் தேர்லுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில், இதுவரையிலும் அமைதியாக இருந்த கட்சிகள், விழித்துகொண்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சில கட்சிகள் தங்களுடைய கோரிக்கைகளை ஏற்கனவே, முன்வைத்து பேரம் பேசும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன.
அதனடிப்படையில், 31 அம்ச கோரிக்கை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்திருந்தது.
அந்த கோரிக்கைகயை ஆராய்ந்து அவற்றை செயற்படுத்துவதற்கு உறுதியளிக்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கே, தாம் ஆதரவளிக்கப்போவதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளத.
கொட்டகலையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஊவாக மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் இருவர், தற்போது களத்தில் குதித்துள்ளனர். இன்னும் பலர் குதிக்கவிருக்கின்றனர். வேட்பாளர்களாக குதிப்போரிடம் தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் அதன் பின்னரே ஒரு தீர்மானத்துக்கு வருவோம் என்றார்.