பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ பதவியிலிருந்து நீக்கிவிட்டு, திறமையான தலைவருக்கு கட்சியின் தலைமைத்துவத்தை கொடுக்கவேண்டும். அவரையே ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கவேண்டும் என ஐக்கிய சட்டத்தரணிகள் சட்டம் அறிவித்துள்ளது.
நீண்டகாலமாக கட்சியின் தலைவராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க, எந்தவொரு தேர்தலிலும் வெற்றிப்பெறவில்லை. அதற்கான திறமை அவரிடத்தில் இல்லை. ஆகையால், கட்சியை வெற்றிப்பாதையில் கொண்டு செல்வதற்கும், வழிநடத்துவதற்கும் கூடிய தலைவரையே நியமிக்கவேண்டும் என அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், ஜனாதிபதித் தேர்தலை, வீட்டில் பூமாலையை வைத்து வணங்கவேண்டும் என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
ரணிலின் ஆட்சியிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கி, மிக சடுதியாக சரிந்தது என்றும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.