இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நளினி, மகளின் திருமண ஏற்பாட்டுக்காக ஐகோர்ட் அனுமதியின்படி 1 மாதம் பரோலில் ஜூலை 25ம் தேதி வெளியில் வந்தார்.
தற்போது சத்துவாச்சாரியில் உள்ள நண்பர் வீட்டில் தங்கியுள்ளார்.
இதற்கிடையே பரோலை நீடிக்க கோரி நளினி மனு தாக்கல் செய்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் 3 வாரங்களுக்கு நளினிக்கு பரோலை நீட்டித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் 2வது முறையாக நளினி, வேலூர் மத்திய சிறையில் உள்ள தனது கணவர் முருகனை சந்தித்து பேசினார்.
இதையடுத்து நளினி ேவலூர் பெண்கள் சிறையில் இருக்கும் தனது உடமைகளை எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று எஸ்பிக்கு மனு எழுதி உள்ளார்.
இந்த கோரிக்கை மனுவை டிஎஸ்பி மணிமாறனிடம் நேற்று முன்தினம் அளித்துள்ளார்.