web log free
April 27, 2024

இந்தியா செல்லும் இலங்கையருக்கும் வாய்ப்பு

இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் மருத்துவ விசா பெறாமல் நாட்டில் எங்கும்  சிகிச்சை பெறலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 
 
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மட்டும் பெற இயலாது.
 
என்றும் ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்கள் கொண்டுள்ள முதன்மை (அசல்) விசாவின் மூலம்  இந்தியாவில் சிகிச்சைப் பெற்றுக்கொள்ளலாம்  என்றும் உள்துறை அமைச்சகம் அதன் அறிக்கையில் கூறியுள்ளது

ஏற்கனவே செல்லுபடியாகும் விசாக்களை கொண்டுள்ள சில வெளிநாட்டவர்கள் இந்தியாவில் தங்கியிருந்த காலங்களில் நோய்வாய்ப்பட்டு மருத்துவ சிகிச்சை பெறுவதில் பல சிரமங்களை எதிர்கொண்டு வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .
 
 சிறிய நோய் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டவருக்கு மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சை மட்டும் தேவை என்ற பட்சத்தில் முதன்மை விசா மூலம் எந்தவொரு மருத்துவமனையும் அனுகி சிகிச்சைப் பெற்றுக்கொள்ளலாம் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது