முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாருமான கோத்தாபய ராஜபக்ஷ, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு புதிய பதவியொன்றை வழங்குவதற்கு அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ வெற்றியீட்டினால், அடுத்து பொதுத் தேர்தல் இடம்பெறும், அதில் வெற்றியீட்டியதன் பின்னர் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, சபாநாயகராக தெரிவுச் செயவதற்கே இணக்கம் காணப்பட்டுள்ளது.
அந்த புதிய அரசாங்கத்தில், பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவே தெரிவுச் செய்யப்படுவார் என ஏற்கனவே, இணக்கம் காணப்பட்டுள்ளது.
எது எப்படியாயினும், இது தொடர்பில் கடந்த 27ஆம் திகதி இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்படவில்லை.
இதுதொடர்பிலான விசேட யோசனையொன்றை நிபுணர்களும் தொழில்தருணர்களும் முன்வைத்துள்ளனர் என அறியமுடிகின்றது.