web log free
April 06, 2026

கோத்தாவை தேடிச் சென்று சந்தித்தார் ஹக்கீம்

 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை, சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பில் எவ்விதமான அரசியலும் பேசப்படவில்லை. சிநேகபூர்வமாக இடம்பெற்ற அந்த சந்திப்பில், அடுத்து ஒருநாளை ஒதுக்கி சந்திப்பது என இருவரும் இணக்கம் தெரிவித்துள்ளனர் என தெரிகிறது.

தன்னுடைய புதல்வியின் திருமணத்துக்கான அழைப்பிதழையே ஹக்கீம் கோட்டாவிடம் வழங்குவதற்காக சென்றிருந்தார் என அறியமுடிகின்றது. 

Last modified on Sunday, 01 September 2019 02:53
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd