web log free
May 07, 2024

மற்றுமொரு பாய்ச்சலுக்கு தயாராகிறார் மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றுமொரு காய்நகர்த்தலை முன்னெடுத்துள்ளார் என அறியமுடிகின்றது.

கடந்த வாரம் அருக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை முற்றாக இல்லாமற் செய்வதற்கு இருவர் இணக்கம் தெரிவித்துள்ளனர் என அறியமுடிகின்றது.

ஒரே கட்சியை சேர்ந்த பிரதமரும், சபாநாயகரும் தெரிவுச் செய்யப்பட்டால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியுடன் அடிக்கொருதடவை முரண்பாடுகள் ஏற்படுகின்றன. அதனை தவிர்க்க வேண்டுமாயின் 19ஆவது திருத்தத்தை இரத்துச் செய்யவேண்டும் என்றும் வழக்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அமையவே இவ்விருவரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,

தற்போது பதவியிலிருக்கும் ஜனாதிபதியின் பதவிக்காலம் எப்போது நிறைவடையவிருக்கின்றது என்பது தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் எண்ணத்தை கோருவதற்கான ஆவணத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாரித்துள்ளார் என அறியமுடிகின்றது.

உயர்நீதிமன்றத்துக்கு அந்த ஆவணம் இதுவரையிலும் அனுப்பப்படவில்லை என்றாலும், ஜனாதிபதி செயலத்தின் மேலதிக செயலாளர் ஒருவரிடத்தில் மிக பாதுகாப்பாக இருப்பதாக அறியமுடிகின்றது.

ஜனாதிபதி செயலாகத்தினால் கடந்தவாரம் மிக இரகசியமாக தயாரிக்கப்பட்ட அந்த ஆவணம், அடுத்தவாரத்திலேயே உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது. 

தான், பழைய அரசியலமைப்பின் பிரகாரம், தான் பதவியேற்றுக்கொண்டதனால், அதன் உத்தியோபூர்வ பதவிக்காலம், பழைய அரசியலமைப்பின் பிரகாரமா? ஆரம்பமாகிறது. அல்லது அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கைச்சாத்திட்ட 2015.05.15 அன்றையதினமா? என்பது தொடர்பிலேயே ஜனாதிபதி, உயிர்நீதிமன்றத்தின் எண்ணத்தை கோரவுள்ளார். 

உயர்நீதிமன்றத்தின் விளக்கம், சபாநாயகர் கைச்சாத்து இட்டதிலிருந்து என இருக்குமாயின், அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான அழைப்பு 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இடம்பெறாது. 2020 மே மாதமே இடம்பெறும். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய பதவிக்காலம் எப்போது நிறைவடைகின்றது என உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தை ஏற்கனவே கேட்டிருந்தார்.

இந்நிலையில், தன்னுடைய பதவிக்காலம் எப்போது ஆரம்பமாகிறது என்பது தொடர்பில் கேட்கவிருகின்றார்.

ஜனாதிபதியின் அந்த நடவடிக்கைகளுக்கு பிரதான கட்சியொன்றின் தலைவரின் அனுமதியும் கிடைத்துள்ளது என நம்பகரமான வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

தன்னுடைய பதவியின் இருப்பை இன்னும் சில நாட்களுக்கு தக்கவைத்து கொள்ளும் வகையிலேயே மைத்திரிபால சிறிசேன இந்த காய்நகர்த்தலை முன்னெடுத்துள்ளார் என அறியமுடிகின்றது.

 

Last modified on Monday, 02 September 2019 01:56