web log free
November 27, 2024

நண்பகல் 12.11க்கு சூரியன் உச்சம் கொடுக்கும்

வடக்கு, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம், கம்பஹா மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டிலும் மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.  

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

அனுராதபுரம், மற்றும் மன்னார் மாவட்டங்களில் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். 

சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 27ஆம் திகதியில் இருந்து செப்டம்பர் 07 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

01 ஆம் திகதி ஒட்டப்பானை, கொஹொம்பகஸ்வெவ, தலதாகம, தலக்கிரியாகம, யக்குரே, மஹஉல்பொல மற்றும் கிழங்குப்பாலை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. 

Last modified on Sunday, 01 September 2019 03:14
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd