மட்டக்களப்பு, கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட தற்கொலைக் குண்டுதாரியின் தலை உள்ளிட்ட உடற்பாகங்கள், பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தோண்டி எடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு, சீயோன் தேவாலயத்தில், உயிர்த்த ஞாயிறன்று தற்கொலைத் தாக்குதல் நடத்திய தற்கொலைதாரி நசார் முஹம்மட் ஆஸாத் என்பவரின் தலை உள்ளிட்ட உடற்பாகங்களே இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்டன.
இந்த உடற்பாகங்கள் மட்டக்களப்பு, கள்ளியங்காடு இந்து மயானத்தில் ஓகஸ்ட் 26 ஆம் திகதி இரவோடு இரவாக, பொலிஸாரால் மிக இரகசியமாகப் புதைக்கப்பட்டது.
அவ்வாறு புதைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் குண்டுப்பிரயோகமும், குண்டாந்தடி பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டன. இந்த விவகாரம், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டபோது, “தற்கொலைக் குண்டுதாரியின் உடல் பாகங்களைத் தோண்டி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் பாதுகாப்பாக வைக்குமாறு, நீதிபதி ஐ.எம். றிஸ்வான் உத்தரவிட்டார்.