எந்தவித சாட்சியமோ,அடிப்படையோ இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜமாஅதே இஸ்லாமி முன்னாள் தலைவர் ஹஜ்ஜுல் அக்பர் அடங்கலான சந்தேக நபர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சில பொலிஸ் அதிகாரிகள் அரசியல்வாதிகளினதும் ஜனாதிபதி வேட்பாளர்களினதும் தேவைக்காக வீணான பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
நீதித்துறை சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளை அனுமதிப்பது தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சுற்றுலாத்துறை பின்னடைந்தது.
போரா மாநாடு கொழும்பில் நடைபெறுவதோடு 20 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து பங்குபற்றியுள்ளனர்.