தேர்தல் வந்துவிட்டாலே, ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவது, சாடை மாடையாக பேசிக்கொள்வதில் குறைவே இருக்காது. ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்படாத நிலையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியுள்ளது. ஜே.வி.பி, அனுரகுமார திஸாநாயக்கவை நிறுத்தியுள்ளது. ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் குடும்பிச்சண்டை இன்னும் முடிவுக்கு வரவில்லை.
ஸ்ரீ லங்கா சுந்திரக் கட்சி, பிளேட்டை கவிழத்துவிட்டு, அடுத்த பிரதமரே தமது இலக்கு என நழுவிவிட்டது. இந்நிலையில், ஒன்றிணைந்த தொழிற்சங்க பிரதிநிதிகளுடன், மொட்டுவின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
அதில் கருத்துரைத்த அவர், ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தெரிவுசெய்ய முடியாமல் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்பங்கள் அதிகரித்துள்ளன.
அவர்கள் அறிவிப்பதற்குள் நாங்கள், மிக நீண்ட தூரம் பயணித்திருப்போம் என்றார். அதாவது, யானை லத்தி போடுவதற்குள், மொட்டு மலர்ந்திருக்கும் என்ற கருத்துப்பட அவர் தெரிவித்திருந்தார்.