ஐ.தே.க தற்போது ரணில், சஜித் மற்றும் கரு ஆகிய மூன்று பிரிவுகளாக பிளவடைந்துள்ளதாக கம்பன்பில குறிப்பிட்டுள்ளார்.
சிலர் இந்த மூவரில் யார் வந்தால் சிறந்தது என யோசித்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
மூவரும் ஒரே விதமானவர்கள் என தெரிவித்த கம்பன்பில, கடந்த காலங்களில் குறித்த மூவரினால் நாட்டை நிருவகிக்க முடியாது என்பது புலனானதாகவும் கூறினார்.
களவு, கொள்ளைகளில் பரந்த அறிவையுடைய அவர்களுக்கு நாட்டை முகாமைத்துவம் செய்ய முடியாது எனவும், இதனை கடந்த 4 வருடங்களாக அவதானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களில் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவாக வேண்டும் என பெரும்பாலான இளைஞர்கள் விரும்புவதாகவும் கூறினார்.
எனவே 225 உறுப்பினர்களில் ஒருவர் வேட்பாளராக தெரிவுச் செய்யப்படும் பட்சத்தில் தமது ஜனாதிபதி வேட்பாளர் அவர்களில் ஒருவராக இல்லாமல் கவர்சிகரமானவராக திகழ்வார் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.