தனக்கு இயலுமாயின், கத்தோலிக்க மக்களுக்காக ஆளும் கட்சியைச் சேர்ந்த சகலரின் மீதும் தற்கொலைத் தாக்குதலை நான் நடத்துவேன் என்று, ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்ஸா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (5) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களில் பலியான மக்களுக்காக அரசாங்கம் போதியளவில் நிவாரணங்களையோ, நட்டஈட்டையோ வழங்கவில்லை என்றார்.
அவ்வாறான தாக்குதல்கள் மீண்டும் இடம்பெறாத வகையில், சட்டத்தில் திருத்தங்களையோ அல்லது கட்டளைகளையும் கொண்டுவரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனால், கத்தோலிக்க மக்கள் மனவேதனையில் உள்ளனர். அரசாங்கத்தை பாதுகாப்பதில் மட்டுமே ஆளும் கட்சித் தலைவர்கள் முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என்றார்.
மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, நிமல் லன்ஸா ஆற்றிய உரையில் சபைக்கு பொருந்தாத வார்த்தைகளையும் தற்கொலைத்தாக்குதல் நடத்துவேன் என்ற வசனத்தையும் ஹன்சாட்டிலிருந்து அகற்றிவிடுமாறு, அந்த நேரத்தில் சபைக்கு தலைமைத்தாங்கிக் கொண்டிருந்த பிரதி சபாநாயர் ஆனந்த குமாரசிறி கட்டளையிட்டார்.