web log free
May 06, 2024

சஜித்தின் கழுத்துக்கு கயிறு வீசினார் ரணில்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிப்புகள் சூடுபிடித்துள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மற்றுமொரு தேர்தல் நடத்தப்படுவதற்கான வேட்புமனுக்கள் மிகவிரைவில் கோரப்படவுள்ளன.

எம்பிலிப்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலே நடத்தப்படவுள்ளது.

இந்தத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தலில் களத்தில் குதித்திருக்கும் பிரதான கட்சிகளுக்கு ஒரு துருப்புச்சீட்டாகவே அமையவுள்ளது.

அதில் வெற்றிப்பெறும் கட்சி, தன்னுடைய ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை மிகவேகமான முறையில் முன்னெடுத்துச் செல்லமுடியும். 

ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, தன்னுடைய ஜனாதிபதி வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை. 

பாலகிரி தோஷம் என்பதை போல இன்றுபோய் நாளைக்கு வா, என்ற கதையாகவே இருக்கிறது.

இந்நிலையில், தான்தான் ஜனாதிபதி வேட்பாளர் என கூட்டங்களை நடத்திக்கொண்டிருக்கும் சஜித் பிரேமதாஸவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சவாலொன்றை விடுக்கவுள்ளார் என அறியமுடிகின்றது.

அதாவது, எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றியீட்டுவதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவேண்டும்.

அப்படி வெற்றியீட்ட முடியாமல் போய்விட்டால். 

தற்போது முன்வைத்திருக்கும் கோரிக்கைகள் சகலவற்றையும் வாபஸ் பெற்றுக்கொண்டு, கட்சியில் வகிக்கும் சகல பதவிகளையும் துறக்கவேண்டும் என்ற நிபந்தனையை ரணில் விதிக்கவுள்ளார் என அறியமுடிகின்றது.

சஜித்தின் கழுத்தில், எம்பிலிப்பிட்டிய பிரதேச சபைத்தேர்தலை கயிறாக போட்டு இறுக்குவதற்கே, ரணில் காய்நகர்த்துகின்றார் என அறியமுடிகிறது. 

 

 

 

Last modified on Friday, 06 September 2019 15:41