web log free
May 09, 2025

இரும்பு உரிமையாளருக்கு இரும்பு கத்தி வெட்டு

 இரும்புப் பொருள் விற்பனை நிலையமொன்றின் உரிமையாளர் வாள்வெட்டில் படுகாயமடைந்ததை தொடர்ந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ். கோண்டாவில் பகுதியில் உள்ள இரும்புப் பொருள் நிலையத்தின் உரிமையாளர் மீதே இவ்வாறு வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கோண்டாவில், உப்புமடம் பகுதியில் உள்ள இரும்புப் பொருள் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் மீதே வாள்வெட்டுக் குழு தாக்குதல் நடத்தியுள்ளது.

நேற்று (06) மாலை 4.00 மணியளவில் குறித்த இரும்புப் பொருள் விற்பனை நிலையத்திற்குள் நுழைந்த வாள்வெட்டுக் குழு உரிமையாளர் மீது தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

Last modified on Saturday, 07 September 2019 07:02
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd